யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளன என்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளன என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் எழுவைதீவுக்குச் சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
களவாடப்பட்ட இரு சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.





