மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயை முற்றாக ஒழிப்போம் எனும் நோக்கில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட கலந்துரையாடல் .

 

 


 








மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று






 

 










































நோயை முற்றாக குறைப்போம் எனும் நோக்கில் 13.01.2026 அன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரன் தலைமையில் தோற்ற நோய் தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க மற்றும் அவரின் குழுவினரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்  கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் மேலதிக  செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்,  துறைசார்  வைத்திய நிபுணர்கள், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் பணிப்பாளர், புற்று நோய் தடுப்பு சமூக உறுப்பினர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரமுகர்கள், மாட்ட சமூக உத்திகோகத்தர், ஆயுள் வேத வைத்திய சாலைக்கு பொறுப்பான ஆணையாளர், சமுக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், சுகாதார சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்திய அத்தியட்சகர்கள், சுற்றுச்சூழல் ஆணைய உத்தியோகத்தர்கள், சிவில் உத்தியோகத்தர்கள், விவசாயக் குழு உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயை முற்றாக குறைப்பதற்கு  எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என பல மருத்துவ துறைசார் மற்றும் சமுக செயற்பாட்டாளர்களின் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான கருத்துக்கள்,   ஆராயப்பட்டு அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன அத்தோடு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

இந்த நிலையில் குறித்த வேண்டுகோள்களை கருத்திற்கொண்டு நிவர்த்தி செய்வததற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.