செந்தமிழ் ஆகம முறையில் வழிபாடு இடம்பெறும் சிவ ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு வந்தாறுமூலை வாத்திரவெட்டை மயில்தங்கிய மலை திருவருள்மிகு நந்தீச்சரர் திருக்கோயில் மயில்தங்கிய மலையான் நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு திருக்கோயில் உப தலைவர் சு.காசிநாதன் தலைமையில் 04.01.2026 அன்று வந்தாறுமூலை நிர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
முதலில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், ஆசியுரை, வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரை, நாட்காட்டி வெளியீடு இடம்பெற்றதுடன் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
குறித்த நாட்காட்டி திருக்கோயிலின் தலைவர் சண்முகம் நல்லரெட்ணம் அவர்களின் நிதி அனுசரணையில் அச்சிடப்பட்டதுடன் நாட்காட்டியின் முதல் பிரதி தலைவரது குடும்பத்தினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை வந்தாறுமூலை வட்டார உறுப்பினர் த.பிரபாகரன், இசை அமைப்பாளர் க.தேவராசா, வந்தாறுமூலை நிர்முகப் பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள், கண்ணகி அம்மன் ஆலய பிரதம பூசகர், நந்தீச்சரர் திருக்கோயில் அருட்சுனைஞர்கள், வந்தாறுமூலை நிர்முகப் பிள்ளையார் மற்றும் விஷ்ணு ஆலய நிர்வாகிகள், நந்தீச்சரர் திருக்கோயில் நிர்வாக நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பிரதோச, திருவெம்பாவை, சிவராத்திரி பூசை உபயகாரர்கள், திருக்கோயில் சந்தா உறுப்பினர்கள், திருப்பணி சபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)






