சபரிமலை யாத்திரையை முன்னிட்டு, உடப்பு அறுவாய்ப்பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும்ஜோதிச ரூபன் ஆலயத்தில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களின் இந்தியப் பயணம் நாளை (8)வியாழக்கிழமை காலை ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று(7) காலை வீடுகளில்உள்ள சாமிமார்கள் இருமுடி கட்டுதல் மற்றும் ஆலயத்தில் தேங்காய்க்கு நெய் நிரப்புதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
40 மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சகிதம், இவ்வருடம் பதினெட்டாவது வருட படி ஏறும்குருசாமி கா.பார்த்தசாரதிமூர்த்தி தலைமையில் சபரிமலை பாதயாத்திரை நடைபெறவுள்ளது.
இதேவேளை நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சபரிமலைக்குச் சென்று ஐயப்ப பக்தர்கள் மாலை கழட்டுவது வழமையானதாகும்.





