எந்திரி. தயாளசீலன் மயூரன் அவர்களினால் இரீடோ தொழிற்பயிற்சி நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது







மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுப்பதற்கான முன்மாதிரி விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தினை சமாதான தூதுவர் எந்திரி. தயாளசீலன் மயூரன் (சமாதான நீதிவான்) அவர்களினால் மட்டக்களப்பு மன்றேசா வீதியில் அமைந்துள்ள இரீடோ தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று 26.01.2026 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் இளைஞர்கள் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை இழந்து போவதற்கான காரணங்கள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டவுடன் ஒரு உயிரின் மதிப்பு, ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் மற்றும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல எனும் தலைப்புக்களின் ஊடாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது மேலும் குறித்த நிகழ்வில் சமாதான தூதுவர்கள் நித்தியானந்தராஜா அனிஸ்டன் மற்றும் சிவபாலன் ஹேமச்சந்திரன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டு தற்கொலைகளை தடுப்பதற்கான வழிகள் தொடர்பான தங்களுடைய கருத்துக்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.