மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு, முட்டை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், தொழில்துறையை பராமரிப்பது மிகவும் நெருக்கடியாகி உள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் ஒரு கிலோவின் விலை 2,000 ரூபாயாகவும், பீன்ஸ் ஒரு கிலோவின் விலை 1,000 ரூபாயாகவும், தக்காளி, கரட் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை ஒரு கிலோவின் விலை 600 முதல் 700 ரூபாய் வரை இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலை இருந்தபோதிலும், உணவு மற்றும் பானங்களின் விலையை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் மின்சார கட்டணம் அதிகரித்தால், உணவகம் உரிமையாளர்களால் அதனை தாங்கிக் கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





