‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்.

 



அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்.

இதன்படி ரூ. 50 மில்லியன் நிதி திரட்டப்பட்டதோடு அதற்கான காசோலையை பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு