போதைப்பொருளுக்கு அடிமையான மகனை கொன்ற தகப்பன் - பொலன்னறுவையில் சம்பவம்

 


பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், தந்தையாருடன் முரண்பட்டு வீட்டில் தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இது இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையாளியான 48 வயதுடைய உயிரிழந்தவரின் தந்தையை கைது செய்துள்ள பொலிஸார், 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.