ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் தேசிய பாடசாலையில் புதிய தரம் 6 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.








 கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக்  தலைமையில் பகுதி தலைவர் ஐ.எம். முஸம்மில்  ஏற்பாட்டில்  பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. 

இந்நிகழ்வில்  கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எச்.எம்.எம்.பாறூக், மற்றும் கணக்காய்வு அத்தியட்சகர் ஐ.எம்.நியாஸ், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம். றிஸ்வி (மஜீதி)  கலந்து சிறப்பித்ததோடு  சிறப்புரையும் ஆற்றினார்கள்.  

மேலும் சிறப்பு அதிதிகளாக ஊட்ட பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்கள் மற்றும் தரம் 6 வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எச்.எம்.எம்.பாறூக், கணக்காய்வு அத்தியட்சகர் ஐ.எம்.நியாஸ் மற்றும் பரீட்சையில் முதன்மை சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

  ந.குகதர்சன்