டெல்லிக்கு சிபிஐ விசாரணைக்காக விஜய் .

 


டெல்லிக்கு சிபிஐ விசாரணைக்காக விஜய் பயணித்த தனி விமானத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு இரண்டரை இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. 

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு, தவெக தலைவர் விசாரணைக்காக சென்றுள்ளார். 

தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பேரணி கரூர் மாவட்டத்தில் இடம்பெற்ற போது நடந்த இந்த துயர சம்பவம் குறித்து விஜய்க்கு விசாணைக்காக சம்மன் அனுப்பப்பட்டது. 

இதற்கமைய, அவர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு அங்குள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னிலையாகினார். 

இந்நிலையில், விஜய் சென்னையில் இருந்து FLY SBS என்ற நிறுவனத்தின் எம்ப்ரேர் லெகசி 600 என்ற சொகுசு விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளார்.

குறித்த விமானம் வழியில் எங்கும் நிற்காமல் ஐந்தாயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடிய வகையில் கொள்ளளவு உடையது என தெரிவிக்கப்படுகின்றது. 

மொத்தம் 13 பேர் வரை அமரக்கூடிய அந்த சொகுசு விமானத்தில் ஒரு மணி நேரத்திற்கு இரண்டரை இலட்சம் முதல் ஐந்து இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானக் கட்டணம் தவிர்த்து விமான நிலையத்தில் நிறுத்துவதற்கான கட்டணமும் விஜய் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விமானத்தை ஒருநாளைக்கு வாடகைக்கு எடுக்க 20 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவாகக் கூடும் என விமானத்துறை வல்லுநர்கள் குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.