சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்- வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

 


சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,-

 “ஆயுர்வேத பொருட்கள் மற்றும் சில சிகிச்சை முறைகள் தொடர்பாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செய்யப்படலாம்.

இருப்பினும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் , சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் நாட்டில் இல்லை.

அத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.