என். செளவியதாசன்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
எமது நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி மூலம் ஏற்பட்ட வௌ்ளநிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட ஆலயங்களை சுத்தம் செய்வதற்கான
நிதியுதவி வழங்கி வைப்பு.
2025 டித்வா சூறாவளி மூலம் ஏற்பட்ட வௌ்ளநிலைமை காரணமாக பாதிப்புற்ற அம்பாரை மாவட்டத்திலுள்ள ஆலயங்களுக்கு அவற்றை துப்பரவு செய்வதற்காக ரூபா 25000/- பெறுமதியான நிதி உதவிகள் வழங்கப்பட்டது.
குறிப்பாக ஆலயடிவேம்பு பிரதேசத்தில் 05 ஆலயங்களுக்கும்,காரைதீவு பிரதேசத்தில் 05 ஆலயங்களுக்கும்,நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒரு ஆலயத்திற்கும் அந்தந்த பிரதேச செயலகங்களில் வைத்து பிரதேச செயலாளர்களால் உரிய ஆலய அறங்காவல் சபையினரிடம் உரிய காசோலைகள் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி ,மற்றும் பிரதேச செயலகங்களின் செயலாளர்கள்,பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)




