காரைதீவில் முதலைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது- அச்சத்தில் மக்கள்


 



காரைதீவில் உள்ள மாவடிப்பள்ளி ஆறு , கரைவாகு வட்டை ஆறு ஆகியவற்றில்  முதலைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகமாக காணப்படுகிறது .

 அதிக எண்ணிக்கையில் இராட்சத முதலைகள் நடமாடுவதால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இப் பிராந்தியத்தில் முதலை இழுத்து ஒருவர் மரணமானது தெரிந்ததே.

இரவு வேளையில் தனியாக இப்பாதையில் பிரயாணம் செய்வதை தவிர்ப்பது சிறந்தது.

 இரவுவேளையில் கரைக்கு வரும் முதலைகள் தனியாக செல்வோரை ஆற்றுக்குள் இழுத்துச் செல்லும் ஆபத்தான நிலைமை உள்ளது. 

இப்பாதை மிகவும் மோசமாக காணப்படுவதால் இரவுப் பயணத்தை தவிர்ப்பது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்
 
(வி.ரி.சகாதேவராஜா)