இலங்கையில் இந்த ஆண்டு
ஆரம்பம் முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி
விபத்துகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் காவல்துறை
வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்
வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மாஅதிபர்
டபிள்யூ.பி.ஜே.சேனாதீர
(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த
தரவுகளை வெளியிட்டார்.
இதன்படி இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜனவரி 19 வரையான காலப்பகுதியில் 113 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
இதில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் 216 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், 490 சிறு விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
மேலும் விபத்துகள் காரணமாக 159 சொத்து
சேத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விபத்துகளில் உயிரிழந்தவர்களில்
பாதசாரிகளும் உந்துருளியில் பயணித்தவர்களே அதிகளவில்
பாதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும்
விபத்துகளைக் கட்டுப்படுத்த வீதிப் பாதுகாப்புச் சட்டங்களை மிகக் கடுமையாக
நடைமுறைப்படுத்தவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்தவும் காவல்துறை தீர்மானித்துள்ளது.





