புயல் காரணமாக சிவனடி பாத மலை உச்சியில் ஏற்பட்ட மண் திட்டுகள் சரிவு காரணமாகவும் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்கள் வருகை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
பருவ காலத்தை நம்பி நல்லதண்ணி நகர் மற்றும் மலைக்கு செல்லும் பிரதான சாலையில் வர்த்தக நிலையங்களை குத்தகை அடிப்படையில் பெற்றவர்கள் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் நோக்கி உள்ளனர்.
அத்துடன் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக சிவனடி பாத மலை உச்சியில் இருந்து ஆரம்பிக்கும் சியத்தல கங்குல ஓயா வில் எமில்டன் வனப் பகுதியில் இருந்து பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் மரங்கள் மற்றும் கற்கள் மண் திட்டுகள் நிரம்பி உள்ளது அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீராட இருந்த இடத்தில் மண் திட்டுகள் மற்றும் கற்கள் குவிந்து கிடக்கின்றன அதனை அகற்ற நுவரெலியா மாவட்ட ஆட்சியர் துஷாரி தென்னகோன் மற்றும் நுவரெலியா மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் நோர்வூட் பிரதேச செயலாளர் முன் வர வேண்டும்.





