மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள இலங்கை சமுத்திர பல்கலைக் கழகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை
சமுத்திர பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக (Logistic Operation NVQ
IV) ஏற்பாட்டியல் செயற்பாட்டு கற்கைநெறிகளுக்கான புதிய மாணவர்களை
வரவேற்கும் நிகழ்வானது மட்டக்களப்பு பிராந்தி நிலையத்தின் உதவி பணிப்பாளர்
கே.அருள்சிவம் தலைமையில் கடந்த (30) திகதி இடம் பெற்றது.
நவீன
உலகில் புதிய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கும் புதிய தொழில்
முயற்சியாளராக உருவாக்குவதற்கும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் பல
வருடங்களாக சேவையாற்றி வருகின்றது.
உயர் தொழில் நுட்பத்தினாலான
கருவிகள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் நுட்பத்தை
கற்பதற்கான வசதிகளை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கையின் நீல பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாடளாவிய
ரீதியில் 08 பிராத்திய நிலையங்களினுடாக இளைஞர், யுவதிகளுக்கு தொழில்
வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான அறிவை மேம்படுத்தி புதிய விஞ்ஞான தொழில்
நுட்ப அறிவை வழங்கும் பல்கலைக்கழகமாக செயற்படு வருவதுடன் NVQ IV
தரசான்றிதழ்கள் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகளை பயிற்றுவித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் ஆன்மிக அதிதிகளாக இராம
கிருஷ்ண மிசன் சுமாமி உமா டிஸானந்த ஜீ மஹாராஜ், அருட்தந்தை கே. யூட்
டிலக்ஷன், மெளலவி அர்கம் றுலாசத், கிழக்கு மகாண மீன்பிடிப் பிரிவின்
உத்தியோகத்தர் பிரதிபன், மட்டக்களப்பு வலயக்கல்வி உதவி கல்வி பணிப்பாளர்
நிஷாந்த பிரசாத், இறக்காமம் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்
கனிபா, கல்வி சார் மற்றும் கல்விசாரா உத்தியோகஸ்தர்கள்
என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சர்வதேச தரத்திலான தொழில் தகமையை பெற்றக் கொள்ளக்கூடிய பல கற்கைநெறிகள்
இங்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை
சமுத்திர பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் உதவி
பணிப்பாளர் கே.அருள்சிவம் அவர்களின் அயராத முயற்சின் மூலம் மாவட்டத்தில்
முதல் முறையாக ஏற்பாட்டியல் செயற்பாட்டு கற்கைநெறி அறிமுகம் செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.