கதிரவெளி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் பங்கு பற்றியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நாட்காட்டி வழங்கப்பட்டது

 




















 








மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், திருவாதிரைப் பூசைப் பகுதியினரும், கதிரவெளி வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையும் இணைந்து  திருவாசகம் முற்றோதல் நிகழ்வு கதிரவெளி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது 

இதில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மற்றும் கதிரவெளி வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினர், திருவாதிரைப் பூசைப் பகுதியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது திருவாசகம் முற்றோதியோருக்கு சான்றிதழ் மற்றும் நாட்காட்டி வழங்கப்பட்டது