சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிடாத காரணத்தினால், அதற்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் நாளை (07) நடைபெறவுள்ளது.
குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சுகாதார அமைச்சு வழங்கிய வாக்குறுதிகளை மீறி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாளை கூடும் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.





