அஸ்வெசும நலன்புரித்
திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள
பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி
மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில்
வைப்பிலிடப்படவுள்ளன.
அதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின்
கீழ் 14 இலட்சத்து 15 ஆயிரத்து 584 பயனாளி குடும்பங்களுக்கு ஆயிரத்து 123
கோடியே 47 இலட்சத்து 13 ஆயிரத்து 750 ரூபாய் நிதி அவர்களின் வங்கிக்
கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
அத்துடன், அஸ்வெசும முதலாம் கட்டத்தின்
கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 6 இலட்சத்து 18 ஆயிரத்து 440
பயனாளிகளுக்கு 309 கோடியே 22 இலட்சம் ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.
அதேபோன்று, அஸ்வெசும இரண்டாம்
கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 2 இலட்சத்து 48 ஆயிரத்து 454 பயனாளி
குடும்பங்களுக்கு 223 கோடியே 51 இலட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய்
வைப்பிலிடப்படவுள்ளது.
மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின்
கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68 ஆயிரத்து 183 பயனாளிகளுக்கு 34
கோடியே 9 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின்
அஸ்வெசும கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.





