பூஸ்ஸ சிறைச்சாலையில்
அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு
மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை சிறைச்சாலையின் 'D'
பிரிவின் கூரை மீது ஏறிய கைதிகள் குழுவொன்று, சிறை நிர்வாகத்திற்கு எதிராக
போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இதன் போது சிறைச்சாலையின் சில உடமைகளுக்கும்
சேதம் விளைவிக்கப்பட்டன.
தற்போது அந்த நிலமை முழுமையாகக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை திணைக்களம் இது
குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய கைதிகளை இனி
பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தங்க வைக்க முடியாது எனவும்,
எனவே அவர்களை ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க
தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு கைதிகள் மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.





