கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் (பதில்) கடமை புரிந்து கிழக்கு மாகாண அபிவிருத்திகளில் செவ்வனே தனது கடமையை நிறைவேற்றி, சொந்த மாவட்டத்தில் மக்களுக்கான தனது சேவையினை வழங்க வேண்டும் எனும் நிறைந்த அபிலாசைகளுடன் திரு.K.இளம்குமுதன் அவர்கள் 21.01.2026 புதன்கிழமை காலை மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வசித்தி விநாயகரின் ஆசியுடன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் (பதில் கடமை) திரு.U. உதயஸ்ரீதர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. A. சுதர்சன், கணக்காளர் திரு. A. மோகனகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திரு. V. தவேந்திரன், சமூக சேவை உத்தியோகத்தர் திரு. S. சிவலிங்கம் , பிரதேச செயலக நலன்புரி சங்க செயலாளர் திரு. V. பாஸ்கரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களின் கலந்துரையாடலுடன் கிளைகள் ரீதியான அறிமுகம் செய்து வைக்கப்பட்டது, தொடர்ந்து நலன்புரி சங்கத்தினால் தேநீர் உபசாரம் இடம் பெற்று, இந்நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.


.jpeg)


.jpeg)


.jpeg)


.jpeg)


.jpeg)

.jpeg)




