மொனராகலை - ஹம்பேகமுவ தெல்கல்ஆர வனப்பகுதியில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சுமார் 11,570 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு, ஆதாரமாக மாதிரிகளை எடுத்த பின்னர் கஞ்சா செடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் ஹம்பேகமுவ பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, மொனராகலையில் எத்திமலை - கெம்பிலித்த வனப்பகுதியின் ஈரியபொல பகுதியில் சுமார் 1 ½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு கஞ்சா பண்ணைகளை சோதனைக்குட்படுத்தியதில் சுமார் 10,962 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், ஆதாரமாக மாதிரிகளை எடுத்த பின்னர், கஞ்சா செடிகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
சந்தேக நபர்களைக் கைது செய்ய எத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





