கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று ஓய்ந்திருந்த இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதை அவானிக்க முடிகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் 39.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப்பகுதியில் 55 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,
தும்பங்கேணிப்பகுதியில் 36 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப்பகுதியில் 33 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 26 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 31 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வாகரைபகுதியில் 38 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,
கல்முனை பகுதியில் 19.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், இன்று காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளது.
கடந்த 2025 வருடம் முழுவதும் 1863.4 மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பில் அமைந்துள் மிகப் பிரதான குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன.
அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 3அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 28அடி 8 அங்குலம், தும்பற்கேணிக் குளம் 15அடி, உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 13 அடி 9 அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 17 அடி 2அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலம்,
கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள கிராமியக் குளங்கள் முற்றாக நிரம்பியுள்ளன.
இதேவேளை முறையான வடிகான் வசதியின்மையால் கிராமங்களிலுள்ள உள்வீதிகள், மற்றும் குடியிருப்புக்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதனால் மக்களும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருவதையும் காணமுடிகின்றது.





