இலங்கை பெற்றோலியக்
கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று நள்ளிரவு (05) 12.00 மணி முதல்
நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் சில்லறை விலைகளைத்
திருத்தியமைத்துள்ளது.
இந்த விலை மாற்றத்தின்படி, லங்கா
பெட்ரோல் 92 ஒக்டேன் தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கிய எரிபொருட்களின்
விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 279 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 340 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 182 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 323 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு பயன்படுத்தப்படும் லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச் சந்தை விலை மாற்றங்களுக்கு அமைவாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





