அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது.
கூடவே அதிக பனி ஏற்பட்டும் வருகிறது.
இதன்
காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் ஒரு வகை இருமல், தடிமன்,
காய்ச்சல், உடல் வலிக்கு ஆளாகி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
மக்கள் தங்கள் அன்றாட கடமைகளை கூட மேற்கொள்ள முடியாதவாறு குளிரான காலநிலை நிவுகின்றது.
காலை
மற்றும் மாலை, இரவு வேளைகளில் வெளியில் செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து
செல்வது பாதுகாப்பானது எனவும், அவ்வாறான நேரங்களில் உடற்பயிற்சி
செய்பவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது எனவும் வைத்தியர்கள் ஆலோசனை
வழங்கியுள்ளார்கள்.
வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள மாசுகளினால் ஏற்படும் துகள் படிமங்களினாலேயே இவ்வாறான பனிபோன்று குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் அவதானமாக இருப்பதுடன், பாதுகாப்புடன் செயற்படுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
(வி.ரி.சகாதேவராஜா)







