நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம், குரல் என்பவற்றை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் .

 


நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். 
 
அவரது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 
 
'நீயே விடை' என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். 
 
குறித்த நிறுவனம் மட்டுமில்லாமல் வேறு எந்த நிறுவனங்களும் தன்னுடைய பெயர், புகைப்படம், பட்டங்களையும், வசனங்களையும் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.