தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் .

 


பாதுக்கை – தேவாலய வீதியில் உள்ள வீடொன்றில் மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த கணவனும் அவரது காதலியும் பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.