சீலாமுனை நிருபர்
மட்டக்களப்பு - செங்கலடி கணபதிநகர் பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடு திடிரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் கடந்த (22) இடம்பெற்றபோது, வீட்டில் யாருமில்லை என்பதால் எவ்வித உயிராபத்துக்களும் இடம்பெறவில்லை. இதனால், வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் முற்றாக எரிந்துள்ளது.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன், தீக்கிரையான வீட்டினையும்,
இப்பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன், வீடுன்றி தவிக்கும் குடும்பத்திற்கு வீடொன்றை அமைத்து கொடுப்பதற்கான சகல உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவித்தும், இதுவரை ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்று பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.
வீடு முற்றாக எரிந்து போனதால் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ளன. இதனால் குறித்த குடும்பம் செய்வதாறியாது தவிக்கின்றது. இந்தக் குடும்பத்திற்கு இயலுமான உதவிகளை செய்யக்கூடியவர்கள் முன் வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
.jpeg)


.jpeg)






