திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்துக்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன.
இதன் போது வீடு ஒன்று பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் துவம்சம் செய்துள்ளன.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் செய்கை பண்ணிய தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளமையினாலும், தொடர்ச்சியாக யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளமையினாலும் இருக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, பாதுகாப்பான யானை வேலி அமைத்துத் தருமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட வீட்டினை பெற்று தரவும் முன் வரவேண்டும் என உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





