2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
இலங்கை தேயிலை சபையின் தரவுகளின்படி,
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 239 மில்லியன் கிலோகிராம் தேயிலை
ஏற்றுமதி செய்யப்பட்டது.
2024 இதே காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி 223 மில்லியன் கிலோகிராமாக மாத்திரமே காணப்பட்டதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
தேயிலை ஏற்றுமதி வருமானம், 1.4 பில்லியன் ரூபாயால் உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 97 மில்லியன் அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.





