காரைதீவு
விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து
கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத
நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இன்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதில் சுமார் 5 இலட்சத்துக்கு மேலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
காரைதீவு விளையாட்டுக்கழகம் ,விவேகானந்தா விளையாட்டுக்கழகம் மற்றும்
ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு சொந்தமான மூன்று பாய்களே இவ் விதம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைதீவு
பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜயரத்ன மைதானத்துக்கு வருகைதந்து
பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளதாகவும்
தெரிவித்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)





