நாட்டில் அரைவாசிக்கும் அதிகமான தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்?

 


உரிம சிக்கல்கள் காரணமாக நாட்டில் உள்ள தனியார் மருந்தகங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள மொத்த தனியார் மருந்தகங்களில் சுமார் 55 சதவீதமானவை இந்த உரிம சிக்கல் காரணமாக மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

இது தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரிடமிருந்து முறையான தீர்வுகளை எதிர்பார்த்துப் பல கோரிக்கைகளை விடுத்தும், இதுவரை எந்தவொரு சாதகமான பதிலோ அல்லது நிவாரணமோ கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த அதிருப்தி வெளியிட்டுள்ளார்.