பெண்கள் மற்றும் சிறுவர் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
* சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைத் தடுக்கப் புதிய சட்டம்.
* ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கு அமையப் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம்.
* 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம்.
* 1939, 1941 மற்றும் 1998 ஆம் ஆண்டுச் சட்டங்களில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான திருத்தங்கள்.





