தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.

 


தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற உறுப்பினர் உஷானி உமங்கா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 
 
நாடாளுமன்றத்தில்  (23) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். 
 
ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றின் வேறுபாடுகள் குறித்து ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 
 
EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றப்போவதாக தான் கூறவில்லை எனவும், அது சமூகப் பாதுகாப்புக்காகவே உள்ளதாகவும் அவர் கூறினார். 
 
EPF நிதியைக் குறைக்காமல் அல்லது மாற்றாமல், தனியார் துறை ஊழியர்களுக்குத் தனியானதொரு ஓய்வூதிய முறையை வழங்குவது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என அவர் கூறினார்.