காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி 91-வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

 


அநுராதபுரம் - விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மருமகள் காயமடைந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவவத்தில்  91 வயதுடைய விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் தனது வீட்டிற்கு முன்பாக உள்ள பூ மரத்தில் பூக்கள் பறித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாமியாரின் சத்தத்தை கேட்டு வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த மருமகளையும் காட்டு யானை பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானை தாக்குதலில் காயமடைந்த மருமகள், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.