இங்கு Australian White Ibis போன்ற பறவைகள் ஆண்டுதோறும் வந்து
இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்க்கும் ஒரு முக்கியமான பறவைகள்
சரணாலயம் இது, குறிப்பாக குளிர்கால மாதங்களில் ஆயிரக்கணக்கான பறவைகளை இங்கு
காணலாம்,
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் உள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் (வலசைப் பறவைகள்) இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
Australian White Ibis போன்ற புலம்பெயர் பறவைகளும் நியூசிலாந்து நாட்டுப் பறவைகளும் அதிகம் காணப்படுகின்றன.
குளிர்கால மாதங்களில் (டிசம்பர், ஜனவரி போன்ற) மாதத்தில் அதிகளவிலான
பறவைகளைக் காணலாம். பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து,
குஞ்சுகளுக்கு உணவளித்து வளர்க்கின்றன.
நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் பறவைகளைப் காணலாம். பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீண்டும் உரிய நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றது.
இது மட்டக்களப்பின் முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
பறவைகளின் இனப்பெருக்கத்தைப் பார்ப்பதற்காக உள்ளூர் சுற்றுலா பிரயாணிகள் அதிகளவிலானோர் பார்வையிட்டு வருவதும் உண்டு
இயற்கை அமைந்த இந்த சுற்றுச்சூழல் பறவைகளுக்கு முக்கிய வாழ்விடமாகவும் சொர்க்கமாக கருதப்படுகின்றது








