நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் !

 


நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேரம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த போராட்டமானது  வெள்ளிக்கிழமை(இன்று ) காலை 8 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அரசு நிறைவேற்றவில்லை என்பதாலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனினும், சிறார் வைத்தியசாலைகள், புற்றுநோயாளர் வைத்தியசாலைகளில் இந்தப் போராட்டம் இடம்பெறாது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.