ஈழத்து பழநி” என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் 210 சித்தர்கள் வேள்வி யாகத்துடன் விசேட வழிபாடு நடைபெறவிருக்கிறது

 





மார்கழி பௌர்ணமி தினமாகிய நாளை (3) சனிக்கிழமை ” ஈழத்து பழநி” என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் 210 சித்தர்கள் வேள்வி யாகத்துடன் விசேட வழிபாடு நடைபெறவிருக்கிறது.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் முருக பக்தர் சுப்பிரமணியம் தியாகராஜா ( இ.ஆசிரியர்) தலைமையில் நடைபெறவிருக்கும்
இப்பௌர்ணமி நிகழ்வில், சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான தலைவர் சிவசங்கர் ஜீ தலைமையிலான குழுவினரும் கலந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் சித்தர்களே வந்து வேலோடு மலையின் உச்சியில் உள்ள சித்தர்கள் பூஜித்த வேலை பூஜித்துவிட்டு செல்வதாக இன்று வரை சொல்லப்படுகிறது.
அந்த அபூர்வமான நேரத்தில் இன்றுவரை ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் சர்வ வல்லமை வாய்ந்த இந்த உலகத்தை ஆளும் 210 சித்தர்கள் பூஜை நடைபெறுகிறது.
நீண்ட கால இடைவேளைக்கு பிறகு வேலோடு மலையில் இலங்கையின் எல்லா பாகங்களில் இருந்தும் ஆன்மீகத்தில் உச்சம் பெற்ற பல யோகிகள், குருமார்கள் இந்த மார்கழி மாத பௌர்ணமியன்று அங்கு ஒன்றுகூடி அபூர்வமான காயகல்ப மூலிகைகளினால் ஒரு மாபெரும் வேள்வியினை செய்ய இருக்கிறார்கள்.

வழமை போல் இம்முறையும் மார்கழி மாத பௌர்ணமியின்று (03/01/2025) சனிக்கிழமை மாலை மூலிகை குளியலுடன் ஆரம்பமாகி, 18 சித்தர்கள் சந்நிதியில் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, வேல் பூஜை மற்றும் இரவு முழுவதும் “தபஸ்” என்னும் உயர்ந்த ஆழ்நிலை தியானம் இரவு முழுவதும் வழமை போல் நடைபெறும்.

வழமை போல் நம் சித்தர்களின் குரல் அன்பர்கள் பூரண சக்திகளை வானத்து மனிதர்களிடம் இருந்து பெறும் அபூர்வமான இந்த பௌர்ணமி பூஜைக்கு தபஸ்விகளான நண்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றோம் என்று ஆலயத் தலைவர் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

 (வி.ரி.சகாதேவராஜா)