திருகோணமலையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் உணர்வபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது!
கொலை செய்யப்பட்ட சிரேஷட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 வது நினைவு தினம் (24 ) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் உணர்வு பூர்வமாக அனுஷடிக்கப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், மட்டு மாவட்ட முதல்வர் சிவம் பாக்கியநாதன் (ஊடகவியலாளர்) கலந்து கொண்டிருந்தார்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டு ஊடக அமையம் வா. கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.


.jpeg)






.jpeg)
.jpeg)





