பொது நிர்வாக சுற்றறிக்கை 34/2025 இற்கு அமைய 2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வைபவம் மதிப்பிற்குரிய பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை Dr. R. முரளீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு அனைத்து உத்தியோத்தர்களும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதுடன் நமது நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்கள் அரச உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் அனைத்து உத்தியோகத்தர்களும் அரச சேவை உறுதிமொழி/ சத்திய பிரமாணத்தை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் குறித்த நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக அரச ஊழியர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் எதிர்கால இலக்குகள் தொடர்பாகவும் சொற்பொழிவாற்றினார்.
அத்துடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் அனைத்து உத்தியோகத் தர்களையும் பூங்கொத்து வழங்கி வரவேற்றதுடன் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பாச்சோறு, சிற்றுண்டிகள் வழங்கி நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய பொறுப்பு அதிகாரிகள், அனைத்து தர உத்தியோகத்தர்கள், தனியார் பாதுகாப்பு ஊழியர்கள்,தனியார் சுத்திகரிப்பு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)




