மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்ல புது முக மாணவர்களின் வரவேற்பும் ,முதலாம் அணி மாணவர்களின் தாலாட்டு நிகழ்வும் -2026

 

 

 

 

     



 

 



 


 


 




 

 











 மட்டக்களப்பு மயிலம்பாவெ









 
















































மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் தலைவர் ச.ஜெயராஜா தலைமையில் மேற்படி நிகழ்வு சிறுவர் இல்ல ஒன்று கூடல் மண்டபத்தில்    மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது .

 மட்டக்களப்பு போதனா வைத்திசாலை வைத்தியர் S.குமணன்    பிரதம அதிதியாகவும்M,   மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி துறைத்தலைவர் M.L.A.வாஜித் சிறப்பு அதிதியாகவும்  , மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிப் பருவத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்  திருமதி அனுரேகா விவேகானந்தன் கௌரவ அதிதியாகவும்,    கிழக்கு மாகாண பாலர் கல்விப்பணியக வெளிக்கள உத்தியோகத்தர் S.பரணீதரன் மற்றும் பிரதேச செயலக சமூக பாதுகாப்பு சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் T.கரதூஷணன் ஆகியோர் அழைப்பு அதிதியாகவும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்கள். 

  ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை  வரவேற்றல் , மங்கள விளக்கேற்றல் , இறை வணக்கம் வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன .

 ஏறாவூர் பற்று கோட்டக்கல்வி பணிப்பாளரும் உதவும் கரங்கள் அமைப்பின் உப தலைவருமான திரு .த .ராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார் .

 உதவும் கரங்களின் தலைவரும் , சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு .ச .ஜெயராஜா தலைமையுரையாற்றினார் . 

  அதிதிகளின் உரையும் இடம் பெற்றது  .
அதனை தொடந்து புது முக மாணவர்களின் வரவேற்பு ,  பாடசாலை சிறார்களின்  கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  பாராட்டு நிகழ்வு  என்பன இடம் பெற்றன. 

 நன்றியுரையோடு நிகழ்வு  இனிதே நிறைவுற்றது .

 நிகழ்வுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் , சிறார்கள் ,ஆசிரியர்கள் பிரதேச வாழ் பொதுமக்கள்  என பலரும் கலந்து சிறப்பித்தனர் .

 EDITOR