மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் 2026 ம் ஆண்டுக்கான புது வருட கடமைச்செயற்பாட்டு நிகழ்வுகள்.














































2026 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில்  வருடத்தின் முதல் நாளான 2026.01.01 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று மு.ப 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில்  அனைத்து உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது. 

மேற்படி நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூறும் முகமாக இரண்டு  நிமிட மௌன இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

மேலும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் "வளமான நாடு அழகான வாழ்க்கை" ஊடாக சவால்களின் முன்னிலையில் தயங்கமாட்டோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களினால்  தலைமையுரை நிகழ்த்தப்பட்டு  கணக்காளர் திரு அ. மோகனகுமார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு அ. சுதர்சன் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் திரு.வே. தவேந்திரன் அவர்களின் வாழ்த்துச் செய்திகளும் வழங்கப்பட்டது. 


மேலும் பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் உத்தியோகத்தர்களால் கலை நிகழ்வுகளும் , புதுவருட தின்பண்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டு நிகழ்வானது சிறப்பாக   இனிதே நிறைவுபெற்றது.