இன்றைய வானிலை 2026.01.08

 


இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கமானது நேற்று இரவு 11.30 மணியளவில் பொத்துவிலில் இருந்து தென்கிழக்காக சுமார் 490 km தொலைவில் காணப்பட்டது. இது அடுத்துவரும் 24 மணத்தியாலங்களில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி மேற்கு - வடமேற்குக் திசையினூடாக நகர்ந்து செல்லும். தொடர்ந்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து சக்தி மிக்க தாழ் அமுக்கமாக வலுவடையும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும்.
வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 50 - 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு , ஹம்பகா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 - 60 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.