2025 வரவு செலவுத் திட்டத்ழில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய, அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் முன்மொழிவின் அடிப்படையில் நடவடிக்கை: கல்வி அமைச்சு அறிவிப்பு

2025 வரவு செலவுத் திட்டத்ழில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய, அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம்  வைப்பிலிடப்பட்டுள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

2026 ஜனவரி 01 முதல் கல்விச் சேவை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என 2025 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 அதற்கமைய குறித்த அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.