பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளது.

 


பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (நேற்று) முதல் இந்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வாங்குவதற்கான வவுச்சர்கள் விநியோகத்தை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் அரசாங்கம் நிறைவு செய்யும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.