தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவர்களை நோக்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக 2024/2025 கல்வியாண்டுக்கான Undergraduate Guide வெளியீடு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பீடத்திற்கு உட்பட்ட துறைத்தலைவர்கள் உரையாற்றினர்.
புதிய கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நிகழ்வாக இந்த ஆரம்ப விழா அமைந்திருந்தது. புதிய மாணவர்கள் அனைவரும் கல்விப் பயணத்தில் முழுமையான வெற்றியை அடைய வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தது.
நிகழ்வில் பதில் பதிவாளர் எம். ஐ. நௌபர், பீடாதிபதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், நூலகர், பல்கலைக்கழக பொறியியலாளர், பிரதம பாதுகாப்பு அதிகாரி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





