பிலிப்பைன்ஸின் பசிலன் (Basilan)
மாகாணத்தில் 350க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு கவிழ்ந்ததில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
படகில் 332 பயணிகள் மற்றும் 27 ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 316 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு கவிழ்ந்ததிற்கான காரணம் இன்னும்
வெளியாகவில்லை என்றும் இருப்பினும், படகு புறப்படுவதற்கு முன்னர் முறையான
ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதிகப்படியான பயணிகள் ஏற்றப்படவில்லை என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.





