பிரதேச சபையின் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நேற்று ( 14) வியாழக்கிழமை பொங்கலுடன் தனது அறுபதாவது வயதில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

 


காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நேற்று ( 15) வியாழக்கிழமை பொங்கலுடன் தனது அறுபதாவது வயதில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவரது இடத்துக்கு புதிய செயலாளராக திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை சபைத்தவிசாளர் சு. பாஸ்கரன் வழங்கி வைத்தார்.

அவரது பதவியேற்பு வைபவமும் ஓய்வு பெறும் செயலாளர் சுந்தரகுமாரின் பணி நிறைவு நிகழ்வு நேற்று சபையில் இடம்பெற்றது. தவிசாளரும் உப தவிசாளரும் சில உறுப்பினர்களும் சபை ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.