காத்தான்குடி வாவியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மற்று மொரு 14 அடி ராட்சத முதலை இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ளது.
தொடர்ந்து ராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது
மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் ராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நீண்ட காலமாக பொது மக்களுக்கும் விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை வாவியில் இன்று (15) கரையோதுங்கியுள்ளது.
சுமார் 14 அடி நீளமுடைய இந்த ராட்சத முதலை காத்தான்குடி, வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்ததோடு கடந்த வருடமும் 28-ம் திகதி 15 அடி ராச்சத முதலையும் இறந்த நிலையில் காணப்பட்டது


.jpeg)
.jpeg)
.jpeg)




