![]() |


மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் 117வது கல்லூரி தினம் அதிபர் S.தருமுதாஸ் தலைமையில்
கல்லூரி முன்றலில் இடம் பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக சரஸ்வதி வழிபாட்டினை தொடர்ந்து இராமகிருஷ்ண மிஷன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் அவர்களால் வீரத்துறவி விவேகானந்தரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
அதனை தொடர்ந்து விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர்களின் உருவச்சிலைகளுக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது .
கந்தப்பெருமாள் கதிர்காமத்தம்பி உடையார் அவர்களின் உருவச்சிலைக்கு அன்னாரது குடும்பம் சார்பில் வருகை தந்த R. முருகதாஸ் அவர்களும், தொ.கு .சபாபதி பிள்ளை உடையார் அவர்களின் உருவச்சிலைக்கு அன்னாரது குடும்பம் சார்பில் வருகை தந்த திருமதி S.திருக்குமரன் அவர்களாலும் மாலை அணிவிக்கப்பட்டது .
தொடர்ந்து கல்லூரி அதிபர் S.தருமுதாஸ் அவர்களால் பாடசாலை கொடி ஏற்றப்பட்டது .
பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து சத்தியப்பிரமாணமும் இடம் பெற்றது .
தமிழர் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் , இறைவணக்கம் என்பன நிறைவுற்றதும், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் அவர்களால் ஆசியுரையும் , கல்லூரி அதிபரால் தலைமை உரையும் வழங்கப்பட்டது .
கந்தப்பெருமாள் கதிர்காமத்தம்பி உடையார் குடும்பம் சார்பில் வருகை தந்த R. முருகதாஸ் அவர்களும், தொ.கு .சபாபதி பிள்ளை உடையார் குடும்பம் சார்பில் வருகை தந்த திருமதி S.திருக்குமரன்அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் .
ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி , பாடசாலை அதிபர் , ஆசிரியர் மாணவர்களால் பலூன்கள் பறக்க விடப்பட்டது
இறுதி நிகழ்வாக விவேகானந்தா மகளிர் கல்லூரியின் 117வது கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் முகமாக கேக் வெட்டப்பட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட துடன் கல்லூரி தினம் நிகழ்வு இனிதே நிறைவுக்கு வந்தது .
EDITOR.











